23.12.2020
ஒரு
குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு செய்வது ஓர் ஆண் தான். ஒவ்வொரு
குழந்தைக்கும் 23 + 23 குரோமோசோம்கள் (Chromosomes) உள்ளன என்பதை அறிவோம்.
தாய்
மூலம் 23; தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும்
குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்; இருவரின் x + x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை அறிவியல் அறுதியிட்டுக் கூறி உள்ளது.
ஒரே குடும்பத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே குடும்பத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.
ஏனெனில்
பெண் குழந்தையை உருவாக்கும் x குரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது.
பெண்ணிற்கு
y குரோமோசோம்கள் தந்தை வழி வருவது இல்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத்
தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான்
வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
வழி வழியாக என்பதில்
இருந்தே புரிந்து இருக்க வேண்டுமே... முப்பாட்டனார், பாட்டனார், மகன்,
பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும்
விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இருக்கின்றனர்.
இதே
முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப் பேத்தி, எள்ளுப் பேத்தி என x
குரோமோசோம்கள் வழி வழியாக வருவது இல்லை. தன் தாயிடம் இருந்தும், தன்
தந்தையிடம் இருந்தும் x குரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.
ஓர் ஆணால் மட்டுமே இந்த y குரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y குரோமோசோம்கள் கிடைப்பது இல்லை. ஆணின் y குரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y குரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டு இருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டு இருக்கிறதாம்.
13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்றுப் போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும்; பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த இரத்த உறவுகளுக்கு இடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.
வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
கொரோனா தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆணையால் எங்குமே செல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கென்னடி ஆறுமுகம் குடும்பத்தினர்... கேமரன் மலையில். 31.12.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக