26 டிசம்பர் 2020

என்றாலும், எனினும், ஆயினும், ஆனாலும்

16.12.2020

என்றாலும், எனினும், ஆயினும், ஆனாலும்; இந்தச் சொற்களின் வேறுபாடுகள்


ஆயினும், என்றாலும், இருந்தாலும், இருந்த போதிலும்...

ஆங்கிலத்தில் although

எ.கா: அறிஞர் அண்ணா நன்கு படித்தவர். ஆயினும் எளிமையானவர்.

செல்லக்குட்டி அழகுதான்;
ஆனாலும் பொட்டு வைக்கவில்லையே


ஆனாலும், இருந்த போதிலும்... இரண்டும் ஒன்றுதான். ஒரு பொருளைக் குறிக்கும்.

ஆங்கிலத்தில் however

எ.கா: கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு

......

எனினும், என்றாலும், ஆயினும், இருந்த போதிலும்...

ஆங்கிலத்தில் however

எ.கா: காகம் என்றால் கறுப்பு என்று சொல்லப் படுகிறது. எனினும் மிக மிக அரிதாக வெள்ளை நிறத்திலான காக்கைகளும் உள்ளன.

......

என்றாலும், இருந்தாலும், இருந்த போதிலும்...

ஆங்கிலத்தில் even then, nevertheless

எ.கா: சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போலாகுமா

(மலேசியம்)
16.12.2020
5:21 pm


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக