26 டிசம்பர் 2020

லெம்பா பூஜாங் பிரபலமாக்க வேண்டும் - ஜெயஸ்ரீ கண்ணன்

16.12.2020

Raja Sg Buluh:
நம்ப லெம்பா பூஜாங்கைப் பிரபலமாக்க நல்ல திட்டம். கேட்கலாமே?

Jeyashree Kannan:
கட்டாயம் பிரபலப் படுத்த வேண்டும். நாம் தமிழார்வலர்கள் இவ்விடம் பற்றி அறிவோம். ஆனால் தமிழர் பலருக்கும் இந்த இடத்தின் மகிமை இன்னமும் தெரியவில்லை. வருத்தமாக இருக்கிறது.


யோகியின் தேடல்கள்

லெம்போ பூஜாங்கில் அந்த இடத்தில் கூட மேலெழுந்த வாரியாக மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது. தெள்ளத் தெளிவாக ஆதியும் ஆரம்பப் புள்ளியும் அழகாக காட்டப்பட வில்லை என்பது தமிழர் பலரின் ஆதங்கம்.

கம்போடியா அங்கோர்வார்ட் போல் இல்லாமல் காலம் கடக்குமுன் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளுடன் பிரகடனப்படுத்த வேண்டும். வரலாற்றுப் பாடமாக வேண்டும். உலகமே வியர்க்கும் உண்மைகளை ஆதாரங்களுடன் இன்னமும் அழகாகப் பறைசாற்ற வேண்டும். நாளிதழில் மட்டுமல்ல நானிலமும் அறியும் வகை செய்ய வேண்டும்

BK Kumar: 30 வருடத்திற்கு முன் சொன்ன ஒரு கருத்து. பத்திரிகையிலும் வெளியிட்டிருந்தேன். லங்காவி பூஜாங் இரண்டையும் இணைத்து சுற்றுலா ஏற்பாடு செய்யலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக