16.12.2020
மணிப்பூர் தமிழர்கள் பற்றி புலன அன்பர்களின் கருத்துகள்
இந்தியாவின் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள். அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிப்புரா, மணிப்பூர். இவற்றை ஏழு சகோதரிகள் (செவன் சிஸ்டர்ஸ்) மாநிலங்கள் என்று அழைக்கிறார்கள்.
இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில் தான் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறோம். மணிப்பூருக்குத் தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த வியப்பான கதை.
பர்மாவில் 1962-ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி. அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழர்களை நசுக்கிப் போட்டு விரட்டத் தொடங்கினார்கள். உழைத்துச் சம்பாதித்த தமிழர்களின் கோடிக் கோடியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
தமிழர்கள் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றப் பட்டனர். இந்தியாவிற்கு மறு ஏற்றுமதி செய்யப் பட்டனர்.
Raja Sg Buluh: உங்கள் கட்டுரையின் கடைசிப் பாகம் இந்த நாட்டு சூழ்நிலையோடு ஒத்துப் போகிற மாதிரி தெரியுது. நாம் எல்லாம் வந்தேறிகள். இவர்கள் தான் 10-ஆம் நூற்றாண்டில் வந்து இந்த நாட்டைக் கண்டுபிடித்து கடுமையாக உழைத்து இந்த நாட்டை வளப்படுத்தியது போல தெருக்கூத்து காட்டுகிறார்கள்... பாவிகள்
Panayapuram Athiyaman: மியான்மர் எனப்படும் பர்மா வளர்ச்சிக்கு, பாடுபட்டு நல்வாழ்வு வாழ்ந்த தமிழர்களின் சொத்துக்கள் அந்த அரசால் பிடுங்கப்பட்டு விரட்டி அடிக்கப் பட்டனர்.
இதில் பெருவணிகர்களான நகரத்தாரும் அடங்குவர். ஆனால் இதை தட்டிக் கேட்க, நியாயத்தை நிலைநிறுத்தி புனர்வாழ்வு பெற்றுத் தர யாருக்கும் எண்ணமே ஏற்படவில்லை என்பது "வருத்தமான ஒன்று....
Muthukrishnan: கூடுதலான தகவல். மணிப்பூரில் சில ஆயிரம் தமிழர்கள் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
BK Kumar: அந்த வாரிசுகள் திரும்பி வந்து தக்க ஆவணங்களை அளித்தால் திருப்பி வழங்கப் படுவதாக ஒரு தகவல். எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. 60 ஆண்டுகள் ஆகின்றன. இனியும் தமிழ்நாடு அரசாங்கம் கண்டு கொள்ளுமா... நம்பிக்கை இல்லை... 🙏🙏
Muthukrishnan: அடுத்த மாதம் சசிகலா சின்னம்மா விடுதலை ஆகிறார். அவரிடம் சொன்னால் ஒருக்கால அவர் முயற்சி செய்யலாம்... 😀😀
Raja Sg Buluh: ஆமாம். இதற்கு அவரை தவிர வேறு ஆல் இல்லை
Amachiappan: ஐயா, மணிப்பூர் தமிழர்கள் தமிழ்மொழி பேசுகிறார்களா?
Muthukrishnan: மணிப்பூர் தமிழர்கள் முன்பு தமிழ் மொழி பேசினார்கள். நீண்ட காலமாகி விட்டதால் இப்போதைய தலைமுறையினர் ஒரு கலப்புத் தமிழ் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் இளைஞர்கள் பலர் அங்குள்ள மோரோ பூர்வீகப் பெண்களை மனம் முடித்து உள்ளார்கள். அதனால் தமிழ் மொழி மெல்ல கரைந்து வருவதாகவும் கேள்விப் படுகிறோம்.
மணிப்பூர் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த அதே இந்தியாவிலேயே தனித்து விடப்பட்ட சமூகமாக வாழ்கின்றார்கள். ஆனால் நாம்... நம் மூதாதையர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கே மலாயாவில் கால் பதித்து விட்டார்கள். இருப்பினும் தமிழர்களுக்குப் பின்னர் வந்த வந்தேறிகள் சிலர் அவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்களே... என்னத்தைச் சொல்வது...
16.12.2020
1:49 pm
Raja Sg Buluh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக