16.12.2020
மகாகவி பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்து இருந்த சமூகம்.
குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியைப் பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லிக் கேலி செய்தது அந்தச் சமூகம்.
பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்! சாப்பிட உட்காரும் போதும் ஒரு மகாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார். கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.
அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.
5:44 pm
16.12.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக