04 ஜனவரி 2021

எட்வின் ஹப்பிள் - கென்னடி ஆறுமுகம் கிரீக்

30.12.2020

1924 டிசம்பர் 30-ஆம் தேதி சூரியக் குடும்பம் அமைந்து உள்ள பால்வீதி மண்டலத்திற்கு வெளியிலும், விண்மீன் மண்டலங்கள் (Galaxy) உள்ளன என்பதை முதன்முறையாக எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) என்பவர் கண்டறிந்து அறிவித்தார்.

அதுவரை பால்வீதி (Milky Way) மண்டலம்தான் ஒட்டுமொத்த அண்டமுமே என்றுதான் மனிதர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர்!

பால்வீதி மண்டலத்திற்கு வெளியே தென்பட்டவற்றைச் சுருள் நெபுலாக்கள் spiral nebulae) என்றுதான் அழைத்துக் கொண்டு இருந்தார்கள். விண்ணில் தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட அயனியாக்கப்பட்ட வாயுக்கள் ஆகியவற்றின் மேகங்கள் தான் நெபுலா என்று அழைக்கப் பட்டன.

நெபுலா என்ற லத்தீன் சொல்லுக்கு பனி மூட்டம் அல்லது புகை என்று பொருள். நெபுலாவில் இருந்து பல புதிய விண்மீன்கள் உருவாகும் என்றாலும், நமக்கு அருகாமை மண்டலமாக உள்ள ஆண்ட்ரமீடா (Andromeda Nebula) உள்ளிட்ட மண்டலங்களையே அதுவரை நெபுலாக்களாகத்தான் கருதி இருந்தார்கள்.

1919-இல் கலிபோர்னியாவிலுள்ள மவுண்ட் வில்சன் அப்சர்வேட்டரியில் (அப்போது) உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான 100 அங்குல ஹூக்கர் தொலைநோக்கியை நிறுவும் பணி முடியும் போது, ஹப்பிள் அங்கு பணியில் சேர்ந்தார்.

Edwin Hubble's arrival at Mount Wilson Observatory, California in 1919 coincided roughly with the completion of the 100-inch (2.5 m) Hooker Telescope.

கேலக்சியிலிருந்து தொலைவை அளக்க உதவும் செஃபீயிட் வேரியபிள் என்ற துடி விண்மீன் வகையைச் சேர்ந்த விண்மீன்களை இத்தொலைநோக்கி மூலம் ஹப்பிள் கண்டறிந்தார்.

அந்த அளவீடுகளைப் பயன்படுத்தி, இந்த நெபுலாக்கள் என்றழைக்கப்பட்டவை நெடுந்தொலைவில் இருப்பதையும், அதனால் அவை பால்வீதி மண்டலத்தின் பகுதிகளாக இருக்க முடியாது என்பதையும் அவர் கண்டறிந்தார்.

அவை நம் கேலக்சிக்கு வெளியே உள்ளவை என்று ஹப்பிள் 1924-இல் அறிவித்ததைத் தான்; 1755-ஆம் ஆண்டு, 'ஹிஸ்ட்டரி ஆப் நேச்சர் அண்ட் தியரி ஆப் த ஹெவன்ஸ்' (General History of Nature and Theory of the Heavens) எனும் நூலில் இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant) கருதுகோளாகக் குறிப்பிட்டு இருந்தார்.

அது அன்றைய வானியலாளர்களால் கடுமையாக எதிர்க்கப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஹப்பிளின் முடிவுகளும் எதிர்க்கப் பட்டது. 1929 வரை ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஏராளமான கேலக்சிகளைக் கண்டுபிடித்து இருந்த ஹப்பிள், அவற்றுக்கு இடையிலான தொலைவு குறித்த ஹப்பிள் விதியையும் உருவாக்கி இருந்தார். ஹப்பிளின் கண்டுபிடிப்பு, அண்டம் என்பதைக் குறித்த அறிவியல் பார்வையின் அடிப்படையையே மாற்றி அமைத்தது.

Hubble's findings fundamentally changed the scientific view of the universe. Supporters state that Hubble's discovery of nebulae outside of our galaxy helped pave the way for future astronomers.

எக்ஸ்ட்ரா - கேலக்டிக் ஆஸ்ட்ரானமி என்ற புதிய துறையாகவே உருவாகிய இது, 2016 நிலவரப்படி, நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டு பார்க்க முடிந்த தொலைவு வரை, 2 லட்சம் கோடி கேலக்சிகளும், அவற்றில் ஆயிரம் கோடி கோடி கோடி விண்மீன்களும் இருக்கலாம் என்று கணித்து உள்ளது.

கேலக்சியாஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு பாலைப் போன்ற என்று பொருள். இந்தப் பெயரே இன்று அனைத்து மண்டலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக