15.01.2021
மலேசியம் புலனத்தில் மணிமணியான தகவல்கள் பகிரப் படுகின்றன. வாட்ஸ் அப் ஊடகங்களைப் பொறுத்த வரையில் நேற்றைய பதிவு நேற்றுடன் முடிந்தது. மறுநாள் யாரும் சீண்ட மாட்டார்கள். அதோடு அவை ’அபேஸ்’.
ஆக அந்தத் தகவல்களை வாட்ஸ் அப் புலனத்தில் அப்படியே விட்டு விட்டால்; அந்த அற்புதமான தகவல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போய் விடும்.
தவிர இந்தத் தகவல்கள் எல்லாம் எதிர்காலத்தில் நம்முடைய தமிழர்களுக்கும்; நம்முடைய வாரிசுகளுக்கும்; நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கும் போய்ச் சேர வேண்டும். அதுவே நம்முடைய தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.
அதற்காக ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதில் பதிவு செய்து வருகிறோம். ஒரு வேலையைச் செய்தால் செம்மையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் செய்யக் கூடாது. இது என் ’பாலிசி’. நேற்று மட்டும் வலைத்தள வேலைகளுக்காக நான்கு மணி நேரம் ஒதுக்கி இருக்கிறேன். அதுவே ஒரு பொங்கல் விழா. அப்புரம் என்னங்க. இன்னும் ஒரு விசயம்.
புலன அன்பர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்; அல்லது விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக அல்ல. அது எல்லாம் இல்லீங்க. பெயர் புகழ் விளம்பரம் வெளிச்சம் என்பதை எல்லாம் தாண்டிப் போய் விட்டேன். அவற்றின் மீது இனிமேல் ஆசை எதுவும் இல்லீங்க.
எதிர்காலத் தலைமுறையினருக்கு ஏதாவது நல்லது செய்து விட்டுப் போவோம். அதுவே நம் இலட்சியமாகக் கொள்வோம். மேலும் ஒரு செருகல். நல்ல பயனான தகவல்களைப் பதிவு செய்யுங்கள். புலனத்தில் இருந்து வலைத் தளத்திற்கு ஒரு பதிவு போகிறது என்றால் அந்தப் பதிவிற்குத் தரம் உள்ளது என்று பொருள். சரிங்களா.
கடைசியாக... ஈயடிச்சான் காபி செய்தாலும் தேன் சிந்தும் சிறப்பான காபியாக இருக்கட்டும்.
வெங்கடேசன்: தங்களுடைய முயற்சி வெற்றி பெறட்டும்
ஆதி சேகர்: தாங்களின் கருத்துக்கு தலை வணங்குகிறேன்
சந்திரன் ஜொகூர்: நல்ல அருமையான கருத்து முழுமையாக வரவேற்கிறோம். எதிர்காலத்தில் நாம் இருக்கிறோமோ இல்லையோ, ஆனால் நாம் எழுதி வைத்த பதிவுகள் கண்டிப்பாக இருக்கும்..
பெருமாள் கோலாலம்பூர்: ஒரு படைப்பாளி எதிர்கால வாரிசுகளுக்காகத் திட்டமிடும் செயல் பாராட்டைப் பெறுகிறது. வாழ்த்துகள்.ta
முத்துக்கிருஷ்ணன்: நம் எதிர்காலச் சந்ததிக்கு ஏதாவது நம்மால் இயன்றதைச் செய்வோம்... வாட்ஸ் அப் பதிவுகள் ஒரே நாளில் மறக்கப் படுபவை... அவற்றை இணையத்தில் நிரந்தரமாக்கி விட்டால்... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அப்படியே உலா வந்து கொண்டு இருக்கும்... அதைத் தான் முன்னெடுப்புச் செய்கிறோம்... கண்டிப்பாக... ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நம்முடைய சந்ததியினர் நம்மைப் பற்றி பேசுவார்கள் இல்லையா...
சந்திரன் ஜொகூர்: கண்டிப்பாக பேசுவார்கள் ஐயா.. முடிந்தால் நம்முடைய புகைப்படமும் அது இணைத்தால் சிறப்பாக இருக்கும்.. யார் எழுதினார்கள் என்று அவர்களுக்கு தெரியும்
முத்துக்கிருஷ்ணன்: வாட்ஸ் அப் புலன அன்பர்கள் அனுமதி தர வேண்டுமே... அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் புகைப்படங்களைப் பகிர்வது சட்டப்படி குற்றம்...
குமரன் மாரிமுத்து: உங்கள் உழைப்பும் சேவையும் போற்றுதலுக்குரியது
வணக்கம் ஐயா...கவலை வேண்டாம்,
பதிலளிநீக்குநீங்கள் செய்யும் இந்த செயல் தொண்டுள்ளம்
கொண்டவர்கள் மட்டுமே செய்யக்கூடிய
செயல்.இறைவன் அந்த சிறப்பான தனி
தன்மையை உங்களுக்கு அருளியுள்ளார்.
புலனத்தில் பலர் உங்களுக்கு பக்க பலமாக
இருக்கிறோம்.மலேசியம் என்ற குடும்பத்தில்
அக்கரை கொண்ட பிள்ளைகளும்,
நண்பர்களும், சகோதர சகோதரிகளும்
இருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு
நாங்கள் எடுத்து செல்வோம்.அவனின்றி
ஓர் அணுவும் அசையாது ஐயா...
இறைவன் இந்த செயலை செய்ய உங்களை
தேர்ந்தெடுத்தார்.அது போலவே எங்களையும்
தேர்ந்தெடுத்தார். கண்டிப்பாக உங்கள்
எண்ணம் ஈடேரும்.வாழ்த்துகள் ஐயா...