தமிழ்மலர் - 20.01.2021
இராஜேந்திர
சோழன் 1024-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் மீது படை எடுக்கும் போது
அந்தமான் தீவுகளில் ஏறக்குறைய 200 தமிழர்களைத் தங்க வைத்துவிட்டு
இந்தோனேசியாவுக்குப் போய் இருக்கிறார்.
அந்தமான் தீவுகளைக்
கைப்பற்றியதால் அந்தத் தீவில் ஒரு தற்காலிமான ஆளுமை வேண்டும் என்பதற்காகப்
போர் வீரர்களை விட்டுச் சென்று இருக்கிறார்.
பொதுவாகவே
முன்பு காலத்துச் சோழர்கள்; அவர்கள் கைப்பற்றிய இடங்களில் அவர்களின் போர்
அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக விட்டுச் செல்வது வழக்கம். தவிர அந்தமான
தீவில் சோழர்களின் மரக் கலங்களில் சில சேதம் அடைந்து இருந்தன. பலமான
புயல்காற்றினால் மரக் கலங்கள் சேதம் அடைவது வழக்கம்.
அவற்றைச்
செப்பனிட வேண்டும். சற்றுத் தாமதம் ஆகலாம். அதனால் அவர்களின் கப்பல்களையும்
பாதுகாக்க வேண்டும் என்பதற்காகப் போர் வீரர்கள் சிலரை அந்தமான் தீவுகளில்
விட்டுச் சென்று இருக்கிறார்.
அந்தமான் தீவுகளுக்கு இராஜேந்திர சோழன் மீண்டும் சென்ற போது முன்பு விட்டுச் சென்ற தமிழர் வீரர்கள் பலர் அங்கே இல்லை. ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டவர்கள் காடுகளுக்குள் போய் ஷோம்பேன் பழங்குடி இனத்தாருடன் கலந்து விட்டதாக்ச் சொல்லப் படுகிறது.
அவர்களைத்
தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண விசயம் அல்ல. அந்தமான் காடுகள் அடர்ந்த
அமேசான் காடுகளைப் போல அடர்த்தியான காடுகள். எந்தக் காட்டுக்குள்; எந்த
குகைக்குள் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. தவிர பழங்குடி மக்கள்
வாழும் பகுதிகளுக்குள் செல்வதும் ஆபத்து. விஷ அம்புகளால் கொன்று
விடுவார்கள்.
அங்கு தற்காலிகமாகக் கட்டப்பட்ட கோட்டையில் ஒரு சிலர்
மட்டுமே இருந்து உள்ளனர். அவர்களில் சிலர் அழைத்துச் செல்லப் பட்டதாகவும்
சொல்லப் படுகிறது. இராஜேந்திர சோழன் விட்டுச் சென்ற போர் வீரர்களினால் ஒரு
நல்லதும் நடந்து இருக்கிறது.
அந்தமான்
தீவுகளில் அப்படி விடப்பட்ட தமிழர்களில் சிலர் தனியாக வாழ்ந்து தனி ஒரு
சமூகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்தத் தீவுகளில் ஏற்கனவே வாழ்ந்து
வந்த ஷோம்பேன் பழங்குடி மக்களுடன் இணைந்து ஒரு புதிய கலப்பு தமிழர்ச்
சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.
இன்றும் அந்தத் தமிழர்க்
கலப்பு இன மக்கள் ஷோம்பேன் எனும் பழங்குடி இனத்தின் பார்வையில் வாழ்ந்து
வருகிறார்கள். முகத்தைப் பார்த்தாலே தமிழர்களின் முகத் தோற்றங்கள் பளிச்சென
தெரியும். வேறு விளக்கம்... வேறு சான்றுகள் தேவையே இல்லை.
பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியா; பாபுவா நியூகினி; போர்னியோ போன்ற இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். மலாயாவில் இருந்து புலம்பெயர்ந்த பழங்குடி மக்களையும் அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.
அசல் மண்ணின் மைந்தர்களின் பெயரைச் சொல்லி பேர் போடுபவர்களை மனிதவியலாளர்கள் அந்தக் கணக்கில் சேர்க்க மாட்டார்கள்.
சோழர்
காலத்து அந்தமான் தமிழர்களும்; சன்னம் சன்னமாய் நாகரிக வளர்ச்சி அடைந்து
வருகிறார்கள். பெரும்பாலானவர் தங்களின் பிள்ளைகளைச் சென்னைக்கு மேல்
படிப்பிற்காக அனுப்பி வைக்கிறார்கள். பிள்ளைகளும் நன்றாகப் படிக்கிறார்கள்.
அவர்களில் சிலர் நல்ல நல்ல பதவிகளிலும் சேவை செய்கிறார்கள்.
சோகமான வரலாற்றிலும் சுகமான சுவடுகள் சுந்தரமான ராகங்களைச் சுவாசிக்கின்றன.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.01.2021
ரஞ்சன், கங்கார் பூலாய்: நான் படிக்கும் பொழுது சரித்திரப் பாடத்தில் இவை எல்லாம் மறுக்கடிக்கப் பட்டு இருக்கிறது. ஆங்கிலேயனும், சீனனும், ஜப்பான்காரர்கள் மட்டும் தான் வெட்டி முறித்தார்கள் என்று அவர்களை முன்னிலைப் படுத்திச் சரித்திரத்தைப் படைத்தார்கள்.
வெங்கடேசன்: அருமையான கட்டுரை மிக்க நன்றி ஐயா. சில வருடங்களுக்கு முன் ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அந்தமான் தீவுகளில் ஓர் இனம் வாழ்வதாகவும் அவர்கள் வெளியில் இருந்து யார் புதிதாக வந்தாலும் அடித்தே கொன்று விடுவதாகவும்; ஒரு வெள்ளைக்காரப் பாதிரியாரைக் கொன்றதாகவும் தகவல் வெளியானது.
சந்திரன், லார்கின் ஜொகூர்: உங்களுடைய கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா.
மணியம், கோலாலம்பூர்: வணக்கம். எந்த நேரமும் சுடச்சுட செய்திகளும், கருத்துகளும் இன்னும் காணொலிகளும் வந்து கொண்டு இருக்கும் புலணம் மலேசியம். நன்றி உறவுகளே.
ராதா பச்சையப்பன்: இன்றைய கட்டுரையைப் படித்தேன். மலைத்துப் போனேன். சில விசயங்கள் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. பயமாகவும் இருக்கிறது. இதில் எங்ஙனம் அந்தமானைச் சுற்றிப் பார்க்கப் போவது. பிள்ளையையும் கிள்ளி விட்டு; தொட்டிலையும் ஆட்டி விட்டுப் போனால் எப்படி?
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இன்னும் அந்தமான்; பாபுவா நியூகினி காடுகளில் மனித வேட்டை நடக்கிறது... மாட்டிக் கொண்டால் அம்புட்டுத்தான்...
பொன் வடிவேல்: முருகப் பெருமான் ஆசியும் அருளும் மேன்மைமிகு ஐயா முத்துவுக்கு நிறைந்திருக்கும் தருணங்களில் காய்ந்த சருகுகளின் சலன ஓசைகளுக்கு காது கொடுக்காமல், தெய்வம் வகுத்த பாதையில் தங்க இரதத்தில் மாமன்னராக பவனி வரும் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான உலக மக்களின் ஆத்மாவில் தேனூறும் பஞ்சாமிர்தம் ஊறிக் கொண்டே இருக்கும்.
- பொன்.வடிவேல், ஜோகூர்பாரு- 012-7299587
அருமை ....
பதிலளிநீக்கு