30.12.2020
ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனார். HALAL troli வேண்டும் என்று அங்கு இருந்த பணியாளரிடம் கேட்டார். "அதோ" என்று பணியாளர் ஓர் இடத்தைக் காண்பித்தார்.
உள்ளே சென்ற அவர், HALAL பொருட்கள் இருக்கும் பகுதி எங்கே என்று அங்கு இருந்த பணியாளரிடம் கேட்டார். பணியாளரும் ஓர் இடத்தைச் சுட்டினார்.
பொருட்கள் எல்லாம் வாங்கியாகி விட்டது. இப்போது, "HALAL" counter எங்கே என்று அங்கு இருந்த பணியாளர்களிடம் கேட்க அவரும் ஓர் இடத்தைக் காண்பித்தார்.
கணக்காளர் ஒவ்வொரு பொருளாகக் கணக்குப் பார்த்து தொகையைச் சொன்னார். அந்த வாடிக்கையாளரும் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
பிரச்சனையே இப்போதுதான் வந்தது! அந்தப் பண மெசின், இந்தப் பணம் "HARAM" என்று திருப்பி அடித்தது.
இப்போதைக்கு ஜொகூர் சுல்தான் சொல்வதுதான் மிக அவசியமான தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக