11.01.2021
ஈப்போ மருத்துவமனையில் மிக மிக அமைதியான சூழல். மக்கள் நடமாட்டம் குறைவு. அனைவரின் முகத்திலும் ஒரு வகையான பதற்றம். அனைவருமே அவசரம் அவசரமாக இயங்குகிறார்கள்.
மருத்துவச் சிகிச்சை தொடர்பாக அங்கு போய் இருந்தேன். நோயாயளிகள் எண்ணிகை குறைவு.
ஈப்போ மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு என்று தனியாக ஒரு மருத்துவமனையைக் கட்டி இருக்கிறார்கள். அதனால் நடமாட்டம் குறைவு என்று கணிக்கத் தோன்றுகிறது.
நோயாளிகளை விட மருத்துவர்களின் நடமாட்டம் அதிகமாகத் தெரிந்தது. நம் தமிழ்ப் பெண்கள் நிறைய பேர் மருத்துவர்களாக வலம் வருகிறார்கள். பெரும்பாலும் இளம் வயதுப் பெண்கள்.
என் கணக்குப்படி... என் பார்வைக்கு எப்படியும் 40 - 50 பேர். இளம் வயது ஆண்கள் நான்கு ஐந்து பேரைத் தான் பார்க்க முடிந்தது.
பதிவு செய்தவர்: முத்துக்கிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக