16.01.2021
மலேசியத் தமிழ் எழுத்துலகில் *அமைதியின் சின்னம்* என்று புகழப் பட்டவர். *அன்பின் வண்ணம்* என்று வாழ்த்தப் பட்டவர். அவர்தான் மலேசியப் புகழ் தமிழ் எழுத்தாளர் கௌரி சர்வேசன்.
எவரிடமும் என்றைக்கும் அழுத்தமாகப் பேசும் பழக்கம் இல்லாதவர். அடக்கத்தின் மறுபக்கமாய்ப் பயணித்தவர். எப்போதும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கம் கொண்டவர்.
எழுத்தாளர் மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் _மலேசியம்_ புலன நிர்வாகி கரு. ராஜா அவர்களும்; நானும் பல முறை சந்தித்துப் பேசி இருக்கிறோம். குரல் அதிர்ந்து பேச மாட்டார். மென்மையான குரல். அதுதான் அவரிடம் உள்ள தனித்துவம்.
அவரிடம் நெருங்கிப் பழக ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. 2015-ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கோலாலம்பூரில் ஓர் இணையக் கருத்தரங்கு நடத்தியது. அதில் ’மலேசியத் தமிழர்களும் இணையமும்’ எனும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன்.
அப்போது கௌரி சர்வேசன் தான் மண்டபத்தின் ஒலி ஒளி தொடர்பான தொழில் நுணுக்கங்களுக்கு உதவியாக இருந்தார். நன்றி மறவேன். அதன் பின்னர் அவரிடம் தொலைபேசி மூலமாகப் பேசுவது வழக்கம். புலன நிர்வாகி கரு. ராஜா அவர்களின் நெருங்கிய நண்பரும்கூட.
மலேசியம் புலனத்தில் சென்ற ஆண்டு வரை ஓர் அன்பராகப் பயணித்தார். வேலை பளு காரணமாக விலக வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் சிறுகதைச் செம்மல் என்று புகழாரம் செய்யலாம். இவருடைய சிறுகதைகள் மற்ற மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைக் காட்டிலும் சற்றே மாறுபட்டு; வேறுபட்ட கோணங்களில் பயணித்து உள்ளன.
எழுத்தாளுமையில் தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். ஓர் அழுத்தமான கருவை அனாவசியமாகக் கையாளும் திறனை அவரிடம் காண முடிந்தது.
கௌரி சர்வேசன் அவர்களை மலேசிய தமிழ் எழுத்துலகம் கண்டெடுத்த மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மலேசியம் புலனம் கருதுகிறது. நல்ல அருமையான மனிதர். நல்ல நல்ல கதைகளை எல்லாம் எழுதி இருக்கிறார்.
அவருடைய நூல் வெளியீட்டு விழாவில் மரியாதை நிமித்தமாகப் பலருக்கும் மாலை அணிவிப்பது வழக்கமாகக் கொண்டார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010-ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதை; கௌரி சர்வேசன் எழுதிய “எழுதாத ஒப்பந்தங்கள்” எனும் கதைக்குக் கிடைத்தது. இருபது கதைகளில் சிறந்த கதையாகத் தமிழக எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் தேர்வு செய்தார். அந்தக் கதைக்கு ஆயிரம் வெள்ளி பரிசாக வழங்கப் பட்டது.
2015 செப்டம்பர் மாதம் இவர் எழுதிய 'அணைய மறுக்கும் நெருப்பு' எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.
இவர் கெடா கூலிம் பகுதியில் பிறந்தவர். (19.09.1947). ஜொகூர் குளுவாங்கில் தன் தொடக்க உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் கோலாலம்பூர் அம்பாங் பகுதிக்கு மாற்றலாகி வந்தார்.
ஒரு காப்புறுதி நிறுவனத்தில் உயர் அதிகாரியாகவும் பதவி வகித்தார். நீண்ட காலம் சிங்கப்பூரில் வசித்து வந்தார். சொந்தமாக Perfect Edition (M) Sdn Bhd எனும் ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து நிர்வகித்து வந்தார்.
நேற்றைய முன்தினம் உடற்பயிற்சிக்காக நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு நெஞ்சுவலி. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய *மலேசியம்* புலனம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.
புலன நிர்வாகத்தினர்
மலேசியம்
16.01.2021
பின்னூட்டங்கள்
பெருமாள், கோலாலம்பூர்: அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...!
சின்னராசு, கோலாலம்பூர்: எழுத்தாளர் கௌரி சர்வேசன் காலமானார். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...!
தேவி கடாரம்: ஓம் நமச்சிவாய... ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்...
அமச்சியப்பன்: எழுத்தாளர் கௌரி சர்வேசன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
ஆதி சேகர்: ஆழ்ந்த அனுதாபங்கள் ... ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்...
கு.ச.இராமசாமி, கோலாலம்பூர் : எழுத்தாளர் கெளரி சர்வேசன் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
பாரதிதாசன் சித்தியவான்: ஓம் நமச்சிவாய... ஆழ்ந்த அனுதாபங்கள்
ராதா பச்சையப்பன்: 🙏 அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
செபஸ்டியன் கோப்பேங்: 🙏 அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த இரங்கல்... ஆழ்ந்த அனுதாபங்கள்
ஜெயஸ்ரீ கண்ணன்: ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்...
சாந்தகுமாரி, கோலாலம்பூர் : ஆத்மா அமைதி அடையட்டும்...
குமரன் மாரிமுத்து: அன்னாரின் இன்னுயிர் இறைமடியில் அமைதி அடைய வேண்டுகிறேன். 🙏🙏🙏
வெங்கடேசன்: ஓம் நம சிவாய ஓம்... ஆழ்ந்த அனுதாபங்கள்
கென்னடி ஆறுமுகம்: அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...!
கரு. ராஜா. சுங்கை பூலோ: நல்ல நண்பரை இழந்து விட்டேன். ஆழ்ந்த அனுதாபங்கள்...
உதயகுமார், கங்கார் பெர்லிஸ்: அருமையான நினைவலைகள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
சாகுல் ஹமீது: ஆழ்ந்த அனுதாபங்கள்.
செல்லையா செல்லம்: அன்னாரின் மறைவிற்கு அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துk கொள்கிறேன்...
பாலம் முனியாண்டி: ஆழ்ந்த இரங்கlஐத் தெரிவித்து கொள்வதோடு அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
ரஞ்சன் கங்கார் பூலாய்: அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
😢
பதிலளிநீக்கு