20.01.2021
பதிவு செய்தவர்: ராதா பச்சையப்பன்
அங்கவியோ சங்கவியோ
அழகிய மங்கையோ!
உனை இங்கே
அழைத்தவர் யாரோ!
கோபியர் கொஞ்சும் ரமணா!
கோபால கிருஷ்ணனா!
இல்லை...
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா -
மதுசூதனா!
தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா
ராதா பச்சையப்பன்: கட்டழகி பொட்டு வைத்தால் கண்ணுக்கு அழகு. காதலனை முத்தமிட்டால் கன்னதிற்கு விருந்து. கொட்டும் மழை மேகமோ பூமிக்கு அழகு. தாவி வரும் குழந்தைக்கு தாய் பாலே மருந்து.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஆண் கவிஞர்களுக்குப் போட்டியாக பெண் கவிஞர்களும் துவாலை ஏந்துவது மகிழ்ச்சி அளிக்கிறது... ஒரு பக்கம் சன்னமாய்ப் பொறமையும் வந்து போகலாம்...
தேவி கடாரம்: வாவ். அருமை. வாழ்த்துகள்💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக