17 ஜனவரி 2021

மலாக்கா தோன்றிய வரலாறு

15.01.2021

பதிவு செய்தவர்: ஜெயகோபாலன், பாகன் செராய்

பரமேஸ்வராவின் வேட்டை நாயைச் சருகுமான் தன் பின்னங் காலில் எத்தி உதைத்துத் தள்ளியதை மன்னர் கண்ணுற்றார். அந்த நிகழ்வினைக் (சருகுமானின் வீர தீரச் செயலை) கண்ணுற்ற மன்னர் அங்கு தன் ஆட்சியை நிறுவ எண்ணினார்.

தான் நிழலுக்காக ஒதுங்கிய அந்த மரத்தின் பெயரைக் கேட்டறிந்து அந்த இடத்திற்கு (ஊருக்கு) அந்த மரத்தின் பெயரையே (மலாக்கா) என்று பெயர் சூட்டினார் என்கிறது மலாக்கா வரலாறு.

Pokok Melaka

✅ Bahasa Inggeris: Indian gooseberry

✅ Nama botani: Phyllanthus Emblica - ialah sejenis pokok daun luruh daripada famili Phyllanthaceae. Pokok ini yang terdapat di Malaysia dan India terkenal untuk buahnya yang boleh dimakan. Nama umum untuk pokok ini termasuk:

✅ Bahasa Sanskrit: amalaka

✅ Bahasa Hindi: amla

✅ Bahasa Tamil: nelli-நெல்லி

மலாக்கா என்ற பெயர் வந்ததற்கும் இந்த மரத்திற்கும் தொடர்பு உள்ளதாகக் கூறுகிறார்கள்.

ஆதி சேகர்: மேலே தோழர் ஜெயகோபாலன் Rp (16:22)  அவர்கள் பகிர்ந்த வரலாறு மிக்க கருத்தை...

எப்படி இதுபோல் உள்ளவரிடையே
தமிழ்....
நம் தமிழ்  வரலாற்றை..
நமக்கெல்லாம்
நம் கடந்து வந்த பாதையை தன் எழுத்துகள் மூலமாக
ஆழ் மனதில் பதியும் அளவுக்கு கொண்டு சேர்த்த.......

முத்து ஐயாவையும்...
மற்ற வரலாற்று படைபாளிகளின்
பெயராவது தெரிய
வாய்ப்பு உள்ளதா....?
இவருக்கு.....
விஜய் படம் பார்க்க
முடியவில்லையாம்

இந்த வேளையில் தோழர் ஜெயராமனை பாதம் தொட்டு வணங்கவேண்டும் போல உள்ளது...

வரும் தமிழ் சமுதாயத்திற்க்கு நல்லதொரு தாய் தமிழ் தாய்யை
(இலக்கியாஜெயராமன்) தந்ததற்கு.

ராஜா சுங்கை பூலோ: நான் படிக்கும் போது இப்படித் தான் படித்தேன்.


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
மலாக்கா மரத்தின் பெயரில் இருந்து மலாக்காவின் பெயர் வந்து இருக்கலாம். நான் ஏற்றுக் கொள்கிறேன். இதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் தமிழ் மலர் நாளிதழில் எழுதி இருக்கிறேன்.

மல்லாக்கா என்பது  ஒருகொச்சைத் தமிழ்ச் சொல். அந்தச் சொல்லைப் பரமேஸ்வரா பயன்படுத்தி இருப்பாரா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

பரமேஸ்வரா ஒரு பல்லவர். அவர் தமிழ் மொழியைப் பேசினாரா; அல்லது ஜாவானிய கலப்பு சமஸ்கிருத மொழியைப் பேசினாரா; அல்லது ஜாவானிய கிரியோல் மொழியைப் பேசினாரா; அல்லது ஜாவானிய மொழியைப் பேசினாரா; அல்லது தமிழை எழுத்து முறையைப் பயன்படுத்தினாரா. தெரியவில்லை.

அப்படியே அவர் தமிழ் பேசி இருந்தாலும் அதை மறைத்து விடுவார்கள். மல்லாக்கா எனும் சொல்லை நான் தான் மலாக்கா வரலாற்றில் முன் வைக்கிறேன். இது ஒரு தற்காலிகமான கருத்து. (Hypothesis). கருத்துகளுக்கு நன்றிங்க.

இதைப் பற்றி தமிழ் மலரில் எழுதப்பட்ட கட்டுரை...

https://ksmuthukrishnan.blogspot.com/2020/06/blog-post_4.html

04.07.2020-இல் எழுதப்பட்டது.

https://ksmuthukrishnan.blogspot.com/2020/06/blog-post_25.html

25.06.2020-இல் தமிழ் மலரில் எழுதப் பட்ட முதல் கட்டுரை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக